Latest News



2024 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

2023 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

ஐந்தாவது பட்டமளிப்பு விழா

நான்காவது பட்டமளிப்பு விழாவும் புதுக் கட்டட திறப்பு விழாவும்

மூன்றாவது பட்டமளிப்பு விழா

இரண்டாவது பட்டமளிப்பு விழா

முதலாவது பட்டமளிப்பு விழா

மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்

மைமூனா பின்து ஹாரிஸ் (ரலி) : ميمونة بنت الحارث

உம்மு ஹபீபா பின்து அபீ ஸுப்யான் (ரலி) : أم حبيبة بنت أبي سفيان

ஸபிய்யா பின்து ஹுயைய் (ரலி) : صفية بنت حيي

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) : زينب بنت جحش

ஜுவைரியா பின்துல் ஹாரிஸ் : جويرية بنت الحارث

உம்மு ஸலமா (ரலி) : أم سلمة

ஸைனப் பின்து ஹுஸைமா (ரலி) : زينب بنت خزيمة

ஹப்ஸா பின்து உமர் (ரலி) : حفصة بنت عمر

ஆஇஷா பின்து அபீபக்ர் (ரலி) : عائشة بنت أبي بكر

ஸெளதா பின்த் ஸம்ஆ (ரலி)

கதீஜா பின்து குவைலித்

இஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்?

பாடத்திட்டம்

ஆசிரியர் குழு

ஸ்தாபிதம்

ஸெளதா பின்த் ஸம்ஆ (ரலி)
By hafsa
Created at about 7 years ago

ஸெளதா பின்த் ஸம்ஆ (ரலி) : سودة بنت زمعة

கதீஜா (ரலி) அவரர்களின் மரணத்தை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கைத் துணைவியாக வாழ்க்கைப்பட்ட இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில், ஸௌதா பின் சமாஆ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் அற்பணம் ஆகியவற்றில் தாயவர்கள் மிகச் சிறந்த இடத்தை வகித்தார்கள். இவர்களது எளிமை மற்றும் சுயநலமில்லாத தயாள குணம் ஆகிய நற்குணங்கள் ஆயிஷா (ரலி) அவர்களது மனதை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களில் ஒருவராகவும், இன்னும் இருமுறை ஹிஜ்ரத் செய்த பாக்கியத்தைப் பெற்றவர்களுமாவார்கள். ஒருமுறை அபிசீனியாவிற்கும் இன்னுமொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவர்களது வாழ்வு, உலகத்துப் பெண்மணிகளுக்கோர் முன்னுதாரணமாகும்.

சௌதா பின் சமாஆ (ரலி) அவர்களது தாயார் குறைஷிகளின் பனூ நஜ்ஜார் என்ற குலத்தைச் சார்ந்தவர்கள், தந்தையும் குறைஷிக் குலத்தில் பனூ ஆமிர் பின் லூய் என்ற கோத்திரத்தைச் சார்ந்தவராவார். சௌதா பின் சமாஆ (ரலி) அவர்கள் முதலில் சக்ரான் பின் அமர் என்பவரையும், இந்த முதல் கணவரது மரணத்தை அடுத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் மணந்தார்கள். தனது கணவர் இறந்தவுடன், வாழ்க்கையில் எந்த அர்த்தமுமில்லாமல் இருப்பதாக உணர்ந்து, அன்னையவர்கள் மிகவும் கவலையில் தோய்ந்து போனார்கள்.

சௌதா (ரலி) அவர்களது தோழி கவ்லா பின்து ஹகீம் அவர்கள் அன்னை சௌதாவுடையவும் நபியவார்களுடையவும் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் நடைபெற உதவினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை சௌதா (ரலி) அவர்களுக்கு 400 திர்ஹம்களை மஹராகக் கொடுத்தார்கள்.

நாட்கள் வேகமாக நகர்ந்ததில், அன்னை சௌதா (ரலி) அவர்களுக்கு மிகவும் அதிக வயதாகி முதுமை அடைந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது, தனக்கு அதிக முதுமை ஆகி விட்டதன் காரணமாக எங்கே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னை மணவிலக்குச் செய்து விடுவார்களோ என்ற பயமும் அதிகரித்தது. எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடன் தங்கியிருக்கக் கூடிய தனக்காக ஒதுக்கப்பட்ட நாளை, ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

சௌதா (ரலி) அவர்கள்ர் தனது தள்ளாத முதுமை வரையிலும், அதவாது 80 வயது வரை வாழ்ந்தார்கள். உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது அன்னையவர்கள் இறையடி சேர்ந்தார்கள், அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீ யில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.

Write Your Comments
Your Name
Your Email
Your Comments
Comments

New Applications

Contact Us

View Status of Application