மைமூனா பின்து ஹாரிஸ் (ரலி) : ميمونة بنت الحارث
ஹிஜ்ரி 7ம் ஆண்டு நபியவர்கள் உம்ரதுல் கழா முடிந்ததும் மக்கா மதீனா இரண்டிற்கும் இடையிலுள்ள ஸரப் எனும் இடத்தில் அன்னை மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு முன் அனனையவர்கள் இரண்டு கணவர்களுக்கு வாழ்கைப்பட்டார்கள். முதலாமவர் மஸ்ஊத் அஸ்ஸகபீ இஸ்லாத்திற்கு முன் மரணித்து விட அபூ ரஹ்ம் என்பவரை மணந்தார்கள். அவர்களும் மரணித்துவிட நபியவர்கள் இவர்களை மணந்தார்கள். எனினும் நபியவர்கள் இவர்களுடன் நீண்ட காலம் வாழமுடியவில்லை. சிறது காலத்திலே நபியவர்கள் மரணித்துவிட்டார்கள். ஹிஜ்ரி 51ம் ஆண்டு நபியவர்களைத் திருமணம் செய்த அதே ஸரப் என்ற இடத்தில் மரணித்தார்கள். நபியவர்களைத் தொட்டும் 76 நபிமொழிகள் அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.